தங்கைக்கு188 கத்தி குத்து! கண்கள் தோண்டி எடுக்கக்கப்பட்ட குரூரம்! அக்காள் போட்ட வெறியாட்டம்! பதற வைக்கும் காரணம்!

ரஷ்யாவில் மாடலிங் துறையில் தனக்கு போட்டியாக தங்கையே வந்துவிடக் கூடாது என அக்கா கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளது.


2016ம் ஆண்டு எலிசவெட்டா டுப்ரோவ்னிக் என்ற மாடல் அழகி தனக்கு போட்டியாக அதே தொழிலுக்கு வந்த தங்கை ஸ்டெஃபானியாவினை கொலை செய்தார். இதை தங்கையின் காதலன் அலெக்ஸி பதேவ் பார்த்துவிட்டார். இதையடுத்து காதலன் கொடுத்த புகாரில் எலிசவெட்டாவை கைது செய்த போலிசார் உளவியல் ரீதியான பிரச்சனையில் இந்த குற்றத்தை செய்ததால் அவரை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

ஸ்டெஃபானியாவின் உடற்கூறு ஆய்வறிக்கையை படித்து பார்த்த போலீசார் அதிர்ந்து போயினர். அதாவது தங்கையை கொலை செய்த எலிசவெட்டா அவரது உயிர் துடித்துக் கொண்டிருக்கும்போது கண்கள் இரண்டையும், காதுகளையும் கொடூரமாக பிடுங்கி உள்ளார். மேலும் தலை, கை, கால் என ஆத்திரம் தீர 189 இடங்களில் தங்கையை கத்தியால் குத்தியுள்ளார் எலிசவெட்டா.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மனநலம் சீரடைந்து வரும் எலிசவெட்டா விரைவில் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் எலிசவெட்டாவுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். ஒருவேளை தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து கொலையை பார்த்துவிட்ட காதலன் அலேக்ஸி மீது எலிசவெட்டா பழிபோடவும் வாய்ப்பு இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் சந்தர்ப்பங்கள் எலிசவெட்டாவுக்கு எதிராக இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.