இளைஞருடன் நெருங்கிய தங்கை! பதறிய உடன்பிறந்த அக்கா! நள்ளிரவில் வீட்டுக்கு வந்த இரண்டு பேர்! சென்னையில் அரங்கேறிய பயங்கரம்!

சென்னை சைதாப்பேட்டையில் உடல்நலக்குறைவால் திடீரென மாநகராட்சி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பத்தில் திடீரென திருப்பம் ஏற்பட்டுள்ளது. வீட்டருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி அவர் கொல்லப்பட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.


சென்னை சைதாப்பேட்டை ஜோதி தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயா. ஜெயாவின் தந்தை அரசு ஊழியர் என்பதால் பணியின்போது உயிரிழந்ததன் அடிப்படையில் ஜெயாவுக்கு அவரது கல்வித் தகுதிக்கேற்ப மாநகராட்சி அவருக்கு பணி வழங்கி உள்ளது. மாநகராட்சி பெண் ஊழியரான ஜெயா கணவர் இறந்துவிட்டதால் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென திங்கட்கிழமை காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக அவரது மூத்த சகோதரி தேவி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.  அதே சமயம் தங்கை மாநகராட்சி ஊழியர் என்பதால் அகால மரணம் ஏற்பட்டால் அரசின் நிதியுதவி கிடைக்கும் என்ற அடிப்படையிலும் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை தொடங்கிய அதே நேரத்தில் ஜெயாவின் மரணத்தில் உறவினர்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயாவின் மரணம் குறித்து முறையான தகவல் கூறாமல் உளறிக் கொட்டியதால் சந்தேகம் அவர்மீது அதிகமானது. ஜெயா மரணம் குறித்து விசாரிக்க போலீஸ் வீட்டுக்கு வந்தபோது தேவி ஆவேசமாக அழுது மயங்கி விழுந்ததும் மேலும் அவர்மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. 

பின்னர் ஜெயாவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தபோது அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் ஜெயா உயிர் இழப்பதற்கு முன்னர் அவர் வீட்டிற்கு 2 பேர் சென்று வந்ததை கவனித்தனர். பின்னர் ஜெயாவின் அக்கா தேவியின் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இரவு நேரத்தில் ஜெயா வீட்டிற்குள் இரண்டு ஆண்கள் வந்து சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அது அவரது மாமா எத்திராஜ் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் என்பவதும் அவர்கள் இருவரும் ரூ.10 ஆயிரத்திற்காக ஜெயாவை கொன்றது தெரியவந்ததுள்ளது.

கணவரை இழந்து வாழ்ந்து வந்த ஜெயாவுக்கு சைதாப்பேட்டையில் சொந்தமாக 4 வீடுகள் உள்ளது. வீட்டு வாடகையை அக்கா தேவிக்கு கொடுத்து வந்துள்ளார். மேலும் தன்னுடைய வாழ்க்கை பாதுகாப்புக்காக ஒரு துணையை தேடிக்கொள்ள ஜெயா முடிவெடுத்து இளைஞர் ஒருவருடன் ஜெயா பழகியுள்ளார்.

விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஜெயா திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் எங்கே சொத்துக்கள் கையை மீறி போய்விடுமோ என திட்டம் தீட்டிய தேவி ஜெயாவை கொலை செய்துள்ளார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. சொத்துக்கள் இல்லாத சொந்தங்களில் பாசம் தழைத்தோங்குகிறது. சொத்துக்களோடு இருக்கும் சொந்தங்களில் வேசம் வீறுநடைபோடுகிறது