காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே குடிக்க பணம் கேட்டு தாயை அடித்த தம்பியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெற்ற தாயிடம் வரம்பு மீறிய இளைய மகன்! கொதித்து எழுந்த மூத்த மகன் செய்த தரமான சம்பவம்!

திருப்போரூரை அடுத்த வேண்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள். இவரது கணவர் பூபதி இறந்து விட்ட நிலையில் 33 வயதான மூத்த மகன் இவரது மகன்கள் இளங்கோவனுக்கும் 30 வயதான 2-வது மகன் சிவக்குமாருக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை இருவரும் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தனர்.
சிவக்குமார் தான் சம்பாதிக்கும் பணத்தை மதுவருந்தி நாசம் செய்வதோடு தாயிடமும் குடிக்கப் பணம் கேட்டு அடிக்கடி தொல்லை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. பணம் தர மறுத்தால் தாயை அடித்து உதைப்பதும் வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வந்த சிவக்குமார், மேலும் மது அருந்த பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்ததாவும், பணம் இல்லை என தாய் முனியம்மாள் கூறியதால் அவரை சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இளங்கோவன், எதற்காக அம்மாவை அடிக்கிறாய் என கேட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த இளங்கோவன் அரிவாளை எடுத்து சிவக்குமாரை சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் இளங்கோவனை கைது செய்தனர்.