சர்க்கரை நோயாளிகளின் கவலை! இதை தொடர்ந்து சாப்பிடுங்கள்! பெரிய மாற்றம் தெரியும்!

இன்று பலருக்கு நீரிழிவு நோய் தாக்குகிறது. மாறிவரும் உணவுப்பழக்கம், துரித உணவு கலாசாரம் ஆகியவற்றால் சிறு வயதிலேயே நீரிழிவு, ரத்த அழுத்தம் உண்டாகிறது.


வல்லாரையை சமைக்காமல் பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். இந்த வகை கீரையில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

வெந்தயத்தை சமையலில் பலவிதங்களில் பயன்படுத்துவார்கள். அத்துடன் பொடியாகச்செய்து தனியாகவோ, மோருடன் சேர்த்தோ சாப்பிடலாம். தேநீராக்கிக்குடிக்கலாம். இதில் அதிக நார்ச்சத்தும் இருக்கிறது. க்ளுகோஸ் அளவைக்குறைக்கும் பல்வேறு காரணிகள் வெந்தயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் வெந்தயம் சாப்பிடுவதால் ரத்தத்தில் க்ளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது.

நீரிழிவுக்கு சிறந்த நிவாரணி பாகற்காய். இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. செல்கள், குளுகோஸ் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகிறது. குடலிலிருந்து சேமிப்பாக இருக்கும் க்ளுகோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.

உடலில் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். வீக்கமும் நீரிழிவு நோயும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதாலும் நீரிழிவு நோயைப்பற்றிய ஆய்வுகளில் மஞ்சள் அதிகம் இடம் பிடிக்கிறது. உடல் எடையைக்குறைப்பதிலும், கொழுப்புச்சத்தைக்குறைப்பதிலும் முக்கியப்பங்காற்றுகிறது.