எடப்பாடியாரின் டெல்லி விசிட் சூப்பர் சாதனை... தொகுதிப் பங்கீடு ஓவர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட் சூப்பர் சக்சஸ் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆம், என்ன காரணத்துக்காக டெல்லிக்குப் போனாரோ ஆளுமை மிக்க அவர் சாதித்துக் காட்டி விட்டார் என்றும் அதிமுகவினர் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்


விஷயம் இதுதான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லிக்கு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 170 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட விரும்புவதாக எடப்பாடி அழுத்தமாக பதிவு செய்துள்ளார். 

மீதமுள்ள தொகுதிகளை, அதாவது சுமார் 60 தொகுதிகளை உங்களிடமே கொடுத்து விடுகிறோம். அவற்றிலிருந்து நீங்களும் எடுத்துக்கொண்டு, கூட்டணி கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்து விடுங்கள். நீங்களே பிரித்துக் கொடுக்கும்போது அதை கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ளும். எங்களிடம் என்றால் அதிக தொகுதிகளை டிமாண்ட் செய்வார்கள். அதிமுக 170 இடங்களில் போட்டியிட்டால்தான் திமுகவை தேர்தலில் மண்ணை கவ்வ வைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை அமித்ஷா தெளிவாகப் புரிந்துகொண்ட காரணத்தால், எடப்பாடியின் டீலுக்கு ஓ.கே. சொன்னதாக தெரிகிறது. மேலும் சசிகலா, சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளதால், அவரை கட்சியில் சேர்க்க வற்புறுத்தக் கூடாது; அதில் தமக்கோ கட்சியினருக்கோ விருப்பமில்லை என்பதையும் எடப்பாடியார் உறுதியாக தெரிவித்துள்ளார். அதற்கும் அமித்ஷாவிடமிருந்து சாதகமான சமிக்ஞை வந்ததாக தெரிகிறது.. இந்த விஷயம்தான் அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தியுள்ளது.