அடேங்கப்பா… 54 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ரெடி… எடப்பாடியார் கையொப்பமிட்ட பலே திட்டங்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று ஹோட்டல் லீலா பேலஸில் தொழில் துறை சார்பில், 19,995 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,509 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


அதேபோன்று 4456 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 27,324 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் 5 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். மேலும், 47 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 385 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் ஒரு நிறுவனத்தின் திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.

மின்சார வாகனத்துறையிலும் நுகர்வோருக்கேற்ப மின் வாகனங்கள் உற்பத்தியிலும் பெருமளவில் காலடித்தடம் பதித்திருக்கும் ola electric mobility நிறுவனம், சமீபத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த etergo BV என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 2,354 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,182 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கக் கூடிய மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்தப்பட உள்ளது.        

Torrent gas chennai private limited நிறுவனம், சென்னை மற்றும் திருவள்ளூரில் மாவட்டங்களில், நகர எரிவாயு விநியோக வலையமைப்பினை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் செய்யப்பட உள்ள முதலீடு 5,000 கோடி ரூபாய் மற்றும் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அமெரிக்காவில் உள்ள, temple -arizona வைத் தலைமையகமாகக் கொண்ட first solar நிறுவனம், advanced thin film photo voltaic தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி, thin film photo voltaic solar modules தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் ஆகும். இந்நிறுவனம் 4,185 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,076 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் ளுடிடயச ஆடினரடநள உற்பத்தியினை மேற்கொள்ள உள்ளது.    

Society for smart electric mobility நிறுவனம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாத்தனூரில், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மையங்கள் மற்றும் எதிர்கால மின்சார வாகனங்கள் இயக்கம் போன்ற வசதிகளுடன், மின்சார வாகனங்களுக்கான தொழிற் பூங்காவை அமைக்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும்.

Voltas நிறுவனம், அறை குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் வணிக குளிர் பதன தயாரிப்புகளில் தலைமை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடலில், 1,001 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் குளிர் சாதனப் பெட்டிகள் மற்றும் வணிக குளிர் பதன தயாரிப்புகளுக்கான திட்டத்தினை நிறுவ உள்ளது.

Mylan laboratories நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு மருந்து உற்பத்தியாளர் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளியில், 350 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில், உயிர் காக்கும் மருந்து உற்பத்தி திட்டத்தினை நிறுவ உள்ளது.  

சுவிட்சர்லாந்து நாட்டினைச் சேர்ந்த Gurit india private limited நிறுவனம், காற்றாலை எரிசக்தித் துறையில் நீண்ட காலமாக காலூன்றி வருகின்றது. காஞ்சிபுரத்தில் உள்ள ஒரகடத்தில், 320 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் காற்றாலை தகடுகள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ உள்ளது.  

லாட்வியா நிறுவனத்தினைச் சேர்ந்த Yaclass நிறுவனம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச இணைய அடிப்படையிலான கல்வி தளத்தினை வழங்கிடும் ஒரு முன்னணி நிறுவனமாகும். சென்னையில் 300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் ஒரு நுனரவநஉலீ திட்டத்தினை நிறுவ உள்ளது.

KPR Sugar and apparels ltd நிறுவனம், நூல் துணிகள், ஆடைகள் மற்றும் வெள்ளை கிரிஸ்டல் சர்க்கரை போன்ற பல துறைகளில் முதலீடு செய்துள்ள ஒரு ஒருங்கிணைந்த நிறுவனமாகும். திருப்பூரில் உள்ள பெருமணல்லூரில் 250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் ஒரு ஜவுளி ஆலை உற்பத்தி திட்டத்தினை நிறுவ உள்ளது.

Magnus infrastructure நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 200 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 150 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் ஒரு தொழிற் பூங்காவை, சிறப்பு பொருளாதார மண்டலமாக அமைக்க உள்ளது.   

அமெரிக்காவைச் சேர்ந்த stanadyne நிறுவனம், இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள் மற்றும் காற்று மேலாண்மை அமைப்பு போன்ற உலகளாவிய வாகன தொழில் நுட்பத்தில் ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் fuel injection pump உற்பத்தியினை மேற்கொள்ள உள்ளது.    

Mahindra CIE நிறுவனம் உலைக்கள மோட்டார் வாகன உதிரி பாகங்களை தயாரிக்கும் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தினை மேற்கொள்ள உள்ளது.

Anjan drugs நிறுவனம், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 60 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் ஒரு Bulk drugs / APIs உற்பத்தி திட்டத்தினை மேற்கொள்ள உள்ளது.

Maiva pharma நிறுவனம், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்காக sterlite liguid injections தயாரித்திடும் ஒரு நிறுவனமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 50 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 220 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், இரண்டு அதிவேக குப்பியை நிரப்பும் உற்பத்தி வசதி ஏற்படுத்தி, தனது ஆலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.  

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Eickoff wind asia private limited நிறுவனம், உலக அளவில் கடுமையான நிலைகளைத் தாங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் பற்சக்கர தொழில் நுட்பத்தினை உற்பத்தி செய்திடும் நிறுவனமாகும். இந் நிறுவனம் 410 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 525 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் காற்றாலைகளுக்கான கியர் பெட்டிகள் உற்பத்தி திட்டத்தினை மேற்கொள்ள உள்ளது.

Denmark நாட்டினைச் சேர்ந்த cubic modular systerms நிறுவனம், எலக்ட்ரோ மெக்கானிக் துறையில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும், சுரங்கங்கள், விமான நிலையங்கள், கப்பல்கள், தரவு மையங்கள், மருத்துவ மனைகள், மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை ஆலைகள் போன்ற துறைகளிலும் பரவலான தயாரிப்புகள் மேற்கொள்ளும் நிறுவனமாகும். இந் நிறுவனம், 120 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 106 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் ளுலீநநவ ஆநவயட க்ஷடிஒநள உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.     

இத்தாலி நாட்டினைச் சேர்ந்த sabaf நிறுவனம், வீட்டு சமையல் சாதனங்களுக்கான குழாய்கள், தெர்மோஸ்டாட்டுகள் மற்றும் எரிவாயு சாதனங்களக்கான பர்னர்கள் போன்றவைகளை உற்பத்தி செய்வதற்காக 5 உற்பத்தி தளங்களைக் கொண்டுள்ளது. 75 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி திட்டத்தை நிறுவ உள்ளது.  

  சேலம் மாவட்டத்தில், 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், crown group வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் ஒரு உற்பத்தி திட்டத்தினை நிறுவ உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்தடத்தில் சேலம் மற்றும் இதர முனையங்களில் செயல்படுத்தப்படும்.

அதேபோன்று இன்று அடிக்கல் மற்றும் தொடங்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள். முதலாவதாக, செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், 2,300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் adani data centre நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைத்திடும் திட்டம். இத்திட்டம், 23.7.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில், மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு திட்டமாகும்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் கிராமத்தில், 600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 100 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், பிரான்சு நாட்டினைச் சேர்ந்த Toreent gas நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

திருவள்ளூர் மாவட்டம், தேர்வைகண்டிகையில், 536 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 320 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த baettr india private limited நிறுவனத்தின் வார்ப்பு உற்பத்தி திட்டம். இத்திட்டம், 27.5.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில், மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த திட்டமாகும்.  

சென்னையில் உள்ள பெரம்பூரில் 590 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும் வகையில், SPR குழுமத்தின் IT park zone and market plaza திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் 430 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், indospace vallam II private limited நிறுவனத்தின் தொழிற் பூங்கா திட்டம்.  

 சென்னை போரூரில் உள்ள commerzone IT park 47 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 385 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், சூNPCi development centre நிறுவனத்தின் IT / Back office திட்டம். இந்த மையம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான பேக் எண்ட் நெட்வொர்க்கை நிர்வகிக்கும்.

ஆக, மேற்கூறப்பட்ட திட்டங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா மேற்கொள்ளப்பட்ட 24 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு 24,458 கோடி ரூபாய் ஆகும். இத்திட்டங்களில் உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் 54,218 ஆகும்.