அத்திவரதரை தரிசிக்கப் போன எடப்பாடிக்கு எக்கச்சக்க மரியாதை? எங்க குல சாமிடா!

அத்திவரதரை ஒரே ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று மக்கள் கூட்டம் கூட்டமாக போய்க்கொண்டு இருக்கிறார்கள்.


ஆனால், அரசு யாரும் வரவேண்டாம் என்று தடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அத்திவரதரை தரிசிக்கப் போனார் முதல்வர் எடப்பாடி. அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட், உணவு போன்ற எதுவுமே கொடுக்கப்படுவதில்லை. தண்ணீர் கொடுத்தால் உடனே பாத்ரூம் போகவேண்டும் என்று தொந்தரவு செய்கிறார்கள் என்று புகார் சொல்லப்பட்டது. இதனை சரிக்கட்டுவதற்காக, அத்திவரதர் கோயிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி.

பக்தர்களுக்கு அன்னதானம் போடுவதற்காக தன்னுடைய பங்காக ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, பக்தர்களுக்கு செய்யவேண்டிய மற்ற வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அத்திவரதரை தரிசிக்கச் சென்றபோதுதான் அந்த காமெடி நடந்தது. ஆம், அத்திவரதரை எடப்பாடி தரிசனம் செய்த நேரத்தில், அத்தனை அர்ச்சகர்களும் எடப்பாடிக்கு வணக்கம் வைத்தபடி நின்றனர். அதைப் பார்த்த பக்தர்கள் சிரித்தே விட்டார்கள்.

அர்ச்சகர்கள் கட்டுப்பாட்டில் இருந்து அத்திவரதரை பிரித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அத்தனை பெரிய கும்பிடாம். சினிமா தியேட்டரில் சில நாட்கள் மட்டுமே ஒரு விளம்பரப்படம் ஓடியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் எங்களுக்கு குல சாமி என்ற ரீதியில் விளம்பரம் செய்தார்கள். அதை நேரில் பார்க்க முடிந்தது என்று சிரிக்கிறார்கள் பக்தாஸ்.

அர்ச்சகர்கள்ன்னா சும்மாவா..?