பன்னீர் வந்தாத்தான் மழை வருமாம்! மிரட்டும் ஜோசியர்கள்! மிரளும் எடப்பாடி!

டெல்லிக்குப் போயிருக்கும் எடப்பாடிக்கு இப்போது இருக்கும் ஒரே ஒரு குறை, தண்ணீர் பிரச்னைதான்.


சென்னையை போடா வெண்ணெய் என்று சொல்லும் அளவுக்கு தண்ணீர் பாடாய்படுத்தி வருகிறது. நிலத்தடி நீரும் வற்றிப்போனதால், பலரும் வீடு காலி செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். ஆனால், எங்கே போவது என்பதுதான் கேள்விக்குறி. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இந்தப் பிரச்னைதான் பெரிதாக இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வாங்கித்தான் குளிக்கவும், குடிக்கவும் செய்கிறார்கள்.

இதே நிலை இன்னும் 10 நாட்கள் இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் மெகா பிரச்னை உருவாகிவிடும் என்கிறார்கள். இந்த நிலையில் டெல்லிக்குப் போகும் முன்பு ஒரு ஜோதிடக் குறிப்பு ஒன்று எடப்பாடிக்கு அனுப்பப்பட்டதாம். அந்த ஜோதிடக் குறிப்பில், ‘பன்னீர் செல்வத்துக்குத்தான் தண்ணீர் ராசி இருக்கிறது.

அதனால் பன்னீரை பதவியில் அமரவைத்தால், உடனடியாக தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும் என்று குறிப்பு காணப்பட்டதாம்.  பன்னீரின் தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் என்று தெரிந்தாலும், அந்தக் குறிப்பைப் பார்த்து நொந்துபோயிருக்கிறாராம் எடப்பாடி. உண்மையிலே இந்த வாரத்தில் மழை பெய்யவில்லை என்றால் மக்களின் கோபத்தைத் தாங்க முடியாது.

அதனால் உடனடியாக ஏதேனும் பரிகாரம் செய்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்ததும், முதல் வேலையாக மழை யாகம் தொடங்க இருக்கிறாராம். அதிலும் மழை வரவில்லை என்றால்... என்ன செய்வார் எடப்பாடி என்பதுதான் கேள்வி.