பன்னீருக்கு வலை வீசும் எடப்பாடி - எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!

ஒபிஎஸ் ஊட்டப்பட்ட பதினொரு சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும்


ஒபிஎஸ் ஊட்டப்பட்ட பதினொரு சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கின் கிளைமாக்ஸ் நெருங்குகிறது. இதில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்கிற நம்பிக்கை அதிமுகவின் முக்கிய தலைகளுக்கே இல்லையாம்.அப்படி  தங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதையே காரணமாகக் காட்டி ' அதிமுகவை அழிக்க சதி' என்று குற்றம் சாட்டி தேனிக்காரரை கட்சியில் இருந்து தூக்கி எறிய முடிவு செய்திருக்கிறாராம் சேலத்துக்காரர்.

வேலூர் ரிசல்ட் வந்த உடனே இதற்கான வேலைகள் துவங்குமாம்.வேலூரில் தோற்றாலும் அதற்கு காரணம் ,ஒபிஎஸ் மகன் பார்லிமெண்ட்டில் முத்தலாக்கை ஆதரித்து பேசிய பேச்சு சுட்டிக்காட்டப்படுமாம். இரண்டு அவையிலும் இரண்டு விதமாக பேசியதே திட்டமிட்டுத்தானாம். தேனிக்காரரின் தர்ம யுத்த சகாக்களில் ' குட்டிகள் முதல் மலைகள் வரை' எல்லோரும் சேலம் பார்ட்டியோடு ஐக்கியமாகிவிட்டார்களாம்.அப்போ ரொம்ப நாள் வதந்தியான பிஜேபியில் ஒபிஎஸ் என்பது உண்மையாகிவிடுமோ.