தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆறாம் தேதி அன்று தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து காரின் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றார்.
தள்ளாடியபடியே வந்து மனு கொடுத்த மூதாட்டி! ஐந்தே நாளில் உதவி செய்து நெகிழ வைத்த எடப்பாடி!

செல்லும் வழியில் பாளையங்கோட்டை பகுதியில் பொதுமக்கள் திரண்டு முதல்வரை அன்போடு வரவேற்றனர். இந்நிலையில் பாளையங்கோட்டை சிறு துணை நயினார் தெருவைச் சேர்ந்த திருப்பதி என்கின்ற வயதான மூதாட்டி ஒருவர் கோரிக்கை மனுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் பகுதியை நோக்கி வந்தார்.
இதை கண்ட முதல்வர் கட்சி நிர்வாகிகளிடம் கூற வயதான மூதாட்டி வரவேற்பு மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின் மூதாட்டியிடம் பணிவுடன் தங்களுக்கு என்ன வேண்டும் என முதல்வர் கேட்க, தனது வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர், இன்னும் ஐந்து நாட்களில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மீண்டும் வருவேன் என்றும் அப்பொழுது எனது கையாலேயே உங்களுக்கு உதவி தொகைக்கான அரசாணையை வழங்குவேன் என்றும் உறுதியளித்தார்.
அதன்படி, தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் திருப்பதி மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகைக்கான அரசாணையை வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைப் நெகிழ பாராட்டினார்.