கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி பிடி மேலும் மேலும் உறுதியாகிக்கொண்டே வருகிறது என்பதைத்தான் இந்த தேர்தல் சொல்லியது.
மோடிக்கு தேர்தல் வேலை பார்க்க வாரணாசி புறப்பட்ட பன்னீர்! டென்ஷனில் எடப்பாடி!

நான்கு தொகுதி வேட்பாளர் தேர்வுக்காக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடிக்கு திருப்தி இல்லை. அதனால் வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல் ஏற்பட்டது.
ஒருவழியாக ஓ.பி.எஸ். வசம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். அதன்படியே நான்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்பிறகு கடைசி நேரத்தில், வாரணாசி கிளம்புவதாக தெரிவித்திருக்கிறார் ஓபி.எஸ். எதற்காக என்று எடப்பாடி கேட்டபிறகே, மோடியின் மீட்டிங்கில் கலந்துகொள்ளப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.
திடீரென பன்னீர் சொல்வதைக் கேட்டு எடப்பாடி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஏனென்றால் எப்போது அழைப்பு வந்தது என்று எடப்பாடிக்குத் தெரியவில்லை. தேனிக்கு நரேந்திரமோடி வந்தபோது அழைப்பு விடுத்ததாக கூறியிருக்கிறார் பன்னீர்.
நாம் இருவரும் போகலாமா என்று கேட்காமல், அவர் மட்டுமே கிளம்புவதாகச் சொன்னதைக் கேட்டு டென்ஷன் ஆனாலும் எதுவும் சொல்லாமல் அனுப்பி வைத்திருக்கிறார். கட்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பன்னீரை ஒதுக்கலாம் என்று நினைக்கும் நேரத்தில், பா.ஜ.க.வுடன் மிகவும் நெருக்கம் காட்டுவதைக் கண்டு எச்சரிக்கை அடைந்திருக்கிறார்.
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது திடீரென எடுக்க இருந்த நடவடிக்கையை இதனால் தள்ளிப் போட்டிருக்கிறாராம் எடப்பாடி. எப்படியோ பன்னீருக்கு நல்ல நேரம்தான்.