அனைத்து முயற்சிகளும் தோல்வி! சுர்ஜித்தை மீட்க பஞ்சாப்பில் இருந்து ஆட்களை இறக்கிய எடப்பாடி அரசு!

பொதுவாக இது போன்ற மீட்பு பணிகளில், அரசு நிர்வாகம், துறை சார்ந்த அரசு இயந்திரங்களையே முதலில் முடுக்கி விடும்..


அதாவது இயற்கை பேரிடர் மீட்பு துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளை முன்னிலைப்படுத்தும். ஆனால் சுஜித் விசயத்தில் அரசு தனது நடைமுறை நடவடிக்கைகளை தவிர்த்து தனியார் / தன்னார்வலர் அமைப்புகளையும் ஆரம்பத்திலே அனுமதித்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டது. காரணம் எப்படியாவது மீட்கப்பட்டால் போதும் என்கிற எண்ணமே தான்.   

அதன்படியே, மதுரை மணிகண்டன், திருச்சி டேனியல், கோவை விநாயகம் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீதர் என பலர் களமிறக்கப்பட்டன. இவர்களுடனே அரசுத் துறைகளான தீயணைப்புத்துறை, மாநில பேரிடர் மீட்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புத்துறை, ONGC மற்றும் நெய்வேலி NLC சுரங்க பணியாளர்கள் என கிட்டத்தட்ட 10 மேற்பட்ட குழுக்கள் போராடியும் இந்த நிமிடம் வரை பலனில்லை ..   

கடந்த 2014 - 15 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 36 குழந்தைகள் விழுந்ததாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது .. இதில் மீட்கப்பட்ட குழந்தைகளும் பலர் உண்டு.   

கடந்த 2012 இல் கிருஷ்ணகிரி தளி பகுதியில் ஒரு குழந்தை 800 அடி ஆழ துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 40 அடி ஆழத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் 2 ஜே.சி.பி மூலம் மட்டுமே மீட்கப்பட்டது. அந்த மண்ணின் தன்மை மீட்பு பணிக்கு சாதகமாக இருந்தது.   

ஆனால், சுஜித் விசயத்தில் துரதிஷ்டவசமாக எந்த சூழலும் சாதகமானதாக இல்லை.  

தற்போதும் இதில் அரசியல் செய்யும் எச்சைகளை பற்றியெல்லாம் கவலைப்படாது தமிழக அரசு தன்னால் என்னன்ன வழிகளில் முயற்சிக்க முடியுமோ அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறது.  

தற்போது பஞ்சாபில் இருந்து அனுபவம் வாய்ந்த விவசாயிகள் 2 பேரை தமிழக அரசு தன் சொந்த செலவில் வரவழைத்திருக்கிறது.  

அவர்கள் இன்று இரவு 11 மணிக்கு விமானம் மூலமாக திருச்சி வருகின்றனர்  

ஏற்கெனவே, பஞ்சாபில் 3 குழந்தைகளை இதுபோன்று ஆழ்துளை கிணறுகளில் இருந்து மீட்ட அனுபவம் வாய்ந்தவர்கள் அவர்கள்.  

மூன்று நாட்களாக 300க்கும் மேற்பட்டோர் ஊண் உறக்கம் மறந்து அந்த குழந்தையை மீட்க போராடி வருகிறார்கள். அவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. செத்த நேரம் உங்க பீத்த வாயை மூடிட்டு இருங்கடா அதுவே நீங்க செய்யும் பெரிய உதவி.  

நன்றி: நம்பிக்கை ராஜ்