எக்குத்தப்பாக மாறிய பா.ம.க. போராட்டம்… அன்புமணியைக் கூப்பிட்டு அடக்கிய எடப்பாடி.

தேர்தல் வரும் நேரத்தில் தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக வன்னியர்களுக்கு 20 சதவீதம் என்ற பழைய போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் ராமதாஸ். இந்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றாலும் போராடத் தூண்டியுள்ளார்.


இதையடுத்து இன்று ரயில் மீது கற்களை வீசியும், பஸ்களைத் தடுத்தும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்ததும், அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து பா.ம.க. தொண்டர்களை சென்னைக்கு அனுப்பியது பா.மக. தலைமை.

இந்த நேரத்தில், இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக உடனடியாக அன்புமணிக்கு அழைப்பு விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இதற்காகவே காத்திருந்த அன்புமணியும் எடப்பாடியை சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, நாளையப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுமா அல்லது தொடருமா என்பதை அறிவிப்பதாகக் கூறியிருக்கிறார் அன்புமணி. எதற்காக பா.ம.க. ஆசைப்பட்டதோ, அது நடந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அப்புறமென்ன போராட்டமாவது, இட ஒதுக்கீடாவது.