தப்பு செஞ்சா உடனே அதிரடி நடவடிக்கை..! பொள்ளாச்சி நிர்வாகியை வெளியேற்றிய முதல்வர், துணை முதல்வர்.

அடாவடி என்றாலே அது தி.மு.க.வுக்குத்தான் பொருந்தும். பிரியாணிக் கடை, பியூட்டி பார்லர் என்று தி.மு.க.வினர் அடாவடி செய்யாத ஏரியாவே இல்லை. குற்றங்களில் சம்பந்தப்படும் நிர்வாகிகள் மீது தி.மு.க.வினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை.


ஆனால், ஒரு தவறு செய்துவிட்டு, அ.தி.மு.க.வில் யாரும் நீடிக்க முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது பொள்ளாச்சி சம்பவம். ஆம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.  

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  

இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து, மூன்று பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, மூன்று பேரையும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

தப்பு செஞ்சா உடனே நடவடிக்கை. இதுதான் அ.தி.மு.க. பாலிசி.