கமல்ஹாசனுக்கு குடும்பத்தை கெடுக்கத்தான் தெரியும்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி செம ஹாட்

அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி முடிவுற்ற பணிகளை துவங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 36 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பிலான நிறைவடைந்த 39 பணிகளை துவங்கி வைத்தார். 26 கோடியே 52 லட்சம் மதிப்பிலான 14 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


அவரிடம், கமல்ஹாசன் எம்,ஜி.ஆரின் வாரிசு என்று பேசிவருகிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனக்கே உரிய புன்னகையுடன் கமல்ஹாசனை வெளுத்து வாங்கினார்.

70 வயதில் என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் பிக்பாஸ் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தால், ஒரு குடும்பம்கூட உருப்படாது.

எம்.ஜி.ஆர். தன்னுடைய பாடல்கள் மூலம் எத்தனையோ நல்லநல்ல கருத்துக்களை கூறியிருக்கிறார். நல்லநல்ல பிள்ளைகளை நம்பி என்றெல்லாம் பாடி இருக்கிறார். அப்படி, கமல்ஹாசன் ஏதாவது ஒரு பாட்டு உருப்படியாக பாடி இருக்கிறாரா, அவரை பற்றி கேள்வி எழுப்பாதீர்கள் என்று கிண்டலாக சொல்லிவிட்டுக் கிளம்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.