நானும் அரசு பள்ளி மாணவன்தான்… தமிழக அரசு 7.5% இடஒதுக்கீடு அரசாணையில் சொல்லியடித்த எடப்பாடி பழனிசாமி.

நானும் விவசாயி என்று சொல்லி மக்களை ஈர்த்துவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, ‘நானும் அரசு பள்ளி மாணவன்’ என்பதால் அவர்களின் வேதனை, வலி புரியும் என்று கூறியிருக்கிறார்.


தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’நான் அரசுப் பள்ளி மாணவர் என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களின் மன உணர்வை புரிந்து வைத்துள்ளேன். எதிர்கட்சியினரோ, பொதுமக்களோ யாரும் கோரிக்கை வைக்காத நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளோம். 

ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதம் அளிப்பதால், எதிர்கட்சியினர் இதனை வைத்து அரசியல் செய்யாமல் இருக்கும் விதமாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

இப்படியொரு அதிரடி நடவடிக்கையை ஆளும் கட்சியே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.