முதல்வர் எடப்பாடி தென்னை விவசாயிகள் துயர் தீர்க்க மத்திய அமைச்சருக்கு திடீர் கடிதம்.!

கொப்பரைத் தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோவுக்கு 99.60 ரூபாய் என்று மத்திய அரசு அறிவிப்பு செய்திருக்கிறது. இந்த தொகை போதாது என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயத் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


நாட்டிலேயே தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கிட்டத்தட்ட 4.40 லட்சம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2020ம் ஆண்டுக்கு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் விலையாக ரூ.99.60 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு கஜா புயல், 2019ம் ஆண்டு வெள்ளை ஈக்கள் மற்றும் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று என்று தொடர்து பல்வேறு இடர்களால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அதனால், இந்த ஆண்டு தென்னை விவசாயிகள் துயர் தீர்க்கும் வகையில் குறைந்தபட்ச ஆதாரவிலையை ஒரு கிலோருவ்க்கு 125 ரூபாய் என்று அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுதான் விவசாயிகளின் நியாயமான கோரிக்கை என்று தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.