தேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து செம ரெய்டு விட்ட முதல்வர் எடப்பாடி!

கட்டுக்கோப்பாக ஆட்சியும் கட்சியையும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கொண்டுசென்று வருகின்றனர்.


இந்த நிலையில், ஜால்ரா போடுவதாக நினைத்து சில அமைச்சர்கள் பேசும் செயல், கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாக அமைகிறது. இனியும் தேவையின்றி யாராவது பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய விவகாரத்துக்கு பதில் சொல்வதாகவும், முதல்வருக்கு ஜால்ரா போடுவதாகவும் நினைத்து ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி தான் அடுத்து வரக்கூடிய தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் என்று டென்ஷனை கிளப்பினார்

இதையடுத்து கடம்பூர் ராஜூ, மாபா.பாண்டியராஜன், உதயகுமார் ஆகிய அமைச்சர்கள் ஆளுக்கு ஆள் பேச, கேபி.முனுசாமி போன்றவர்கள் அமைதிப்படுத்த நினைத்து முடியவில்லை. வேறு வழியின்றி அமைச்சர் ஜெயக்குமார், அனைவரையும் அமைதிப்படுத்தி, தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சொல்லி வைத்தார்.

இந்த நிலையில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.  

ஆலோசனையின் முடிவில், 'முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்களோ நிர்வாகிகளோ தொண்டர்களோ யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்க வேண்டாம். இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் கூட கட்சியின் தலைமை நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு கூடிப்பேசி இதுகுறித்த முடிவை தெரிவிக்கும். அதுவும் தேர்தல் சமயத்தில் தான் தெரியவரும்' என்று மட்டும் சொல்லிவிடுங்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேவையில்லாமல் பேசிய அமைச்சர்கள் சிலரை போனில் அழைத்து எடப்பாடியார் செம ரெய்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இனியும் யாராவது பேசுவாங்களா என்ன..?