கவர்னரை அலறவிட்ட எடப்பாடி பழனிசாமி..! 7.5% அவசர ஒப்புதலுக்குப் பின்னணி… அதுக்குள்ள நான்கு வாரமாயிடுச்சா..?

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதன் பின்னணியில், தற்போதைய தீர்வாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கொடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.


கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் மூத்த அமைச்சர்கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

அவர்களிடம் எல்லாம் பல கோணங்களில் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வேண்டியதிருப்பதால் மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவைப்படும் என்று கூறியிருந்தார். 

ஆனால், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கவேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், சட்டென அதனை அரசியலமைப்பு சட்டவிதி 162-ன் கீழ் அரசாணையாக நேற்று தமிழக அரசு வெளியிட்டது. இப்படியொரு ட்விஸ்ட்டை கவர்னர் மாளிகை எதிர்பார்க்கவே இல்லை.

இதன்பிறகும் ஒப்புதல் கொடுக்காமல் இருந்தால் சரிவராது என்ற நிலையில், இன்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். 

எடப்பாடின்னா சும்மாவா என்று அ.தி.மு.க.வினர் கெத்து காட்டுகின்றனர்.