பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி!

அக்டோபர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரையிலும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் விருப்பத்தின் பேரில் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


இந்த நிலையில், தமிழகத்தில் 8 ஆம் கட்ட பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 

அப்போது, பொதுத் தேர்வை சந்திக்க உள்ள 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் என்று அனுமதி வழங்கி தமிழக அரசு செப்டம்பர் 24ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. 

இந்த சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையிலும், மருத்துவக் குழுவுடன் நடத்தப்படும் ஆலோசனையின் அடிப்படையிலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் மேலும் சில நாட்கள் விடுப்பு கிடைத்திருப்பது பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.