தமிழகம் தான் மருத்துவ சேவையில் நம்பர் ஒன் மாநிலம் ..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.

சென்னை வடபழனியில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


மேலும் அவர் பேசுகையில், நோயை ஆராய்ந்து, நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து, நோய் தீர்க்கும் வழிகளை ஆராய்ந்து, நோயாளியின் உடலுக்கு ஏற்றவாறு மருத்துவம் செய்வதே சிறந்தது என்று மருத்துவப் பணி எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தைத் தந்தவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவர்கள்.

ஃபோர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனம், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளை நிறுவி, மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கிவருவது பாராட்டுக்குரியது. சென்னை அடையாறில் இந்த நிறுவனத்தின் மருத்துவமனை ஏற்கனவே இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது வடபழனியில் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு புதிய மருத்துவமனையைத் தொடங்கியிருப்பது, தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுவதை மேலும் வலுவாக்குவதாக அமைந்துள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

இதய தெய்வம் அம்மா அவர்களின் வழியில் செயல்படும் மாண்புமிகு அம்மாவின் அரசும், அனைவருக்கும் உயர்தர மருத்துவ nrit கிடைக்கும் வகையில் மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதனால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவத் துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக இன்றையதினம் விளங்கி வருகிறது.

 “நலமான மாநிலமே, வளமான மாநிலம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான சுகாதாரத் திட்டம், பிரசவ உடனாளர் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்கான அம்மா மகளிர் முழு உடல் பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவமனை திட்டம், அம்மா மருந்தகம் போன்ற தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம், உயர்நிலை மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், 108 அவசர கால ஊர்தி சேவை, இரத்த வங்கிகள், விபத்து சேவை மையங்களுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகளை நிறுவுதல் போன்ற பல முன்னோடி திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவது இத்திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது.

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது மாண்புமிகு அம்மாவின் கொள்கையாகும். 2010-2011ஆம் ஆண்டில் 1,945 ஆக இருந்த மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள், தற்போது 3,400 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கும் விதமாக, மாண்புமிகு அம்மாவின் அரசு, குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அவை அனைத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

7.5 விழுக்காடு வழங்க மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டம் இயற்றியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். மருத்துவம் நுண் கலையாகும். அது வணிகமன்று. ஒரு சேர இதயமும் மூளையும் ஒருமித்து பணியாற்றும் உன்னதமான பணியே மருத்துவமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் மருத்துவமனையை நாடி வரும் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்புடன் பழகி, அவர்களுக்கு உயரிய மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டார்.