பிளாஸ்மா தானம் செய்ய ஆட்கள் குறைவாகவே இருக்கிறது.. தானம் செய்ய வாருங்களேன் முதல்வர் எடப்பாடி அழைப்பு..

கொரோனா நோய்த் தொற்றுக்கு இன்னமும் மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை நல்ல முறையில் பயனளிப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், தானம் தருபவர்கள் எண்ணிக்கை இன்னமும் குறைவாகவே இருக்கிறது.


எனவே, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 275 கோடி ரூபாய் மதிப்பிட்டிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி, பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்துவரும் எடப்பாடி பழனிசாமி, திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன், சில புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். வீட்டு மனைப் பட்டா, அம்மா இருசக்கர வாகனம், விவசாய எந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில் 36 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டவர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள், பிளாஸ்மா தானம் செய்ய தயக்கமின்றி முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.