அண்ணனுக்கு துரோகம் இழைக்கும் ஸ்டாலின்..? ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா... எடப்பாடி பழனிசாமி அழைப்பு

தி.மு.க.வை உடைத்துவிட்டு வெளியே போன வைகோவை தனக்கு அருகே வைத்து அழகு பார்க்கும் ஸ்டாலின், என்னை மட்டும் ஏன் கட்சிக்குள் சேர்க்கவில்லை என்று மதுரையில் அழகிரி கேள்வி எழுப்பினார்.


அழகிரியை கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் என்பதுதான் பெரும்பாலான தி.மு..க. உடன்பிறப்புகளின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், தன்னுடைய அதிகாரத்துக்கும் எதிர்காலத்தில் உதயநிதிக்கும் ஏதேனும் சிக்கல் வந்துவிடும் என்பதால்தான் அழகிரியை உள்ளே இழுப்பதற்கு ஸ்டாலின் தயாராக இல்லை.

இதைத்தான் முதல்வர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாகவே தெரிவித்தார். ‘‘வாரிசு அரசியல் செய்துவரும் ஸ்டாலின், அ.தி.மு.க.வினர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதுகுறித்து என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என்று கேட்டுள்ளார்.

அது மட்டுமின்றி, ஒருதாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கே தூரோகம் இழைக்கும் ஸ்டாலின், மக்களை எவ்வாறு பாதுகாப்பார் என்றும் கேட்டார். துண்டு சீட்டு இல்லாமல், கருத்து மோதலில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியாக விவாதிக்க நான் தயார் என்று எடப்பாடி பழனிசாமி பேசிய விவகாரம் அரசியலில் பெரும் அனலை ஏற்படுத்திவருகிறது.