இ-பாஸ் தொல்லைக்கு முடிவு…! எடப்பாடி பழனிசாமியின் சுதந்திர தின பரிசு.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் இ.பாஸ் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்வதும், அது ரிஜெக்ட் ஆவதும் தொடர்கதையாகவே இருந்துவருகிறது. அதனால், ஏராளமான பாதிப்புகள் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு உத்தரவு போட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த நேரத்தில் கொரோனா தொற்று குறைந்துவரும் நேரத்தில், இ.பாஸ் குறித்து இத்தனை கடுமையான நடவடிக்கை வேண்டியதில்லை என்று அவருக்கு தகவல் சொல்லப்பட்டது.

ஆகவே, வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஆதார் அல்லது ரேசன் அட்டையை மட்டும் ஆதாரமாக காட்டிவிட்டு, இனிமே மாவட்டம் விட்டு மாவட்டம் ஜாலியாகப் போகலாம்.