இறங்கி அடித்த எடப்பாடி பழனிசாமி..! குறி பார்க்காமல் பந்து போட்ட ஜெயகுமார்!

இன்று தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.


 இந்தப் போட்டியை தொடங்கிவைப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவரிடம் பேட்டை கையில் கொடுத்து கிரிக்கெட் விளையாட்டை தொடங்கிவைக்க அழைத்தனர். அவருக்கு அமைச்சர் பழனிசாமி நிறுத்தி நிதானமாக விக்கெட்டை விலக்கி ஒரு பந்து போட்டார். உடனே, அந்தப் பந்தை ஏறிப்போய் அடித்தார் எடப்பாடி. அதன்பிறகு காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி ஒரு பந்தை ஆஃப் சைடில் விலக்கிப் போட்டார்.

அந்தப் பந்தை இறங்கிப் போய் அடித்தார் எடப்பாடி. அதன்பிறகு போட்டியை டாஸ் போட்டு திறந்து வைத்தார். எடப்பாடி விளையாடிய இந்தப் போட்டி இப்போது வைரலாக பரவி வருகிறது. இத்தனை சிறப்பான பந்து வீச்சாளர்களும், சூப்பர் பேட்ஸ்மேன் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் இருப்பது தெரியாமல் யார் யாரையோ வைத்து கிரிக்கெட் விளையாடுகிறார்களே!