கல்லூரி படிப்புக்கு நுழைவுத்தேர்வா..? முடியவே முடியாது கெத்து காட்டும் எடப்பாடியாரின் தமிழக அரசு.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டுவரலாம் என்று காங்கிரஸ் காலத்தில் கொண்டுவரப்பட்ட முடிவுக்கு தி.மு.க. தலையாட்டிய காரணத்தால் ஏற்பட்ட விளைவுகளை தமிழகம் அனுபவித்து வருகிறது. நீட்டை எதிர்க்க முடியாவிட்டாலும் உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கு முயற்சி செய்துவருகிறது அ.தி.மு.க. அரசு.


அதேபோன்று அண்ணா பல்கலைக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டுசெல்லும் முயற்சியையும் தடுத்து நிறுத்தியிருக்கிறது. எங்களுக்கு கூடுதல் வசதிகள் தேவையில்லை என்று உறுதியாக சொல்லியிருக்கிறது.

இந்த நிலையில்தான் கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு புகுத்தும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இதனை ஆரம்பத்திலேயே தடுக்கும் முயற்சியாக, கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது என்ரு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது உயர்கல்வித்துறை. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.