முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவுகள்.. நவம்பர் வரை ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய்… இ.பாஸ் இனிமேல் ஈஸி.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ.பாஸ் நடைமுறையில் உள்ளது. இதில் பல்வேறு நபர்கள் கமிஷன் பார்ப்பதாகவும், எக்கச்சக்க சிக்கல் இருப்பதாகவும் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது.


இதுதவிர, வியாபார நோக்கில் பயணிப்பவர்கள் தினமும் இ.பாஸ் பெறுவது சாத்தியமில்லை என்று தொடர்ந்து அரசுக்கு புகார் தெரிவித்து வந்தனர். அதன்படி, இ.பாஸ் குறித்து புதிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இனி, மாதம் ஒருமுறை இ.பாஸ் புதுப்பித்தால் போதுமானது என்றும் வெளி மாநில தொழிலாளர்களை அழைத்துவருவதில் எந்த பிரச்னையும் இல்லை, அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். /இதையடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்துக்கு வருவது அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகே, தமிழகத்தில் முழுமையான பணிகள் தொடங்க முடியும்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கலந்து கொண்டார். அதேபோன்று, வரும் நவம்பர் மாதம் வரையிலும் ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.