ஒருபோதும் தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்கவே செய்யாது! முதல்வர் எடப்பாடி தி.மு.க.வுக்கு உறுதியான பதில்!

இன்று சட்டசபையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்வது குறித்து தி.மு.க. கேள்வி எழுப்பியது. இதுகுறித்து தமிழக முதல்வர் தெளிவான விளக்கம் அளித்தார்.


‘’உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. நமகு வழங்கப்படவேண்டிய நீர் முழுமையாக வழங்கப்பட வேண்டும். அது மட்டுமின்றி, இந்த நீரை தடுக்கவோ, திருப்பியனுப்பவோ கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேகதாது அணை குறித்து மூன்று நான்கு முறை மேலாண்மை ஆணையத்திடம் அவர்கள் கொண்டுவந்தனர். ஆனால், நாம் கடுமையாக ஆட்சேபணை செய்த காரணத்தால், அதிலிருந்து நீகப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

ஆகவே, அவர்கள் எந்த வகையிலும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்கவே செய்யாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்கு சாதகமாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.