சசிகலா வந்தால் என்னாகும்..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி நச் பதில்

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் தண்டனைக் காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அவரது விடுதலையை துரிதப்படுத்தும் வகையில் ஒருவழியாக அபராதத் தொகை கட்டப்பட்டுள்ளது.


பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அபராதத் தொகையை டிடியாக சசிகலா தரப்பு நேற்று தாக்கல் செய்தது. பழனிவேலு என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி, வசந்தா தேவி பெயரில் ரூ. 3.75 கோடி, ஹேமா பெயரில் ரூ.3 கோடி மற்றும் விவேக் பெயரில் 10,000 ரூபாய் டிடி எடுத்து சமர்ப்பிக்கப்பட்டது. 

அபராதத் தொகை கட்டிவிட்டதால், முன்கூட்டியே விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது ஆனால், சிறை நிர்வாகமோ, அடுத்த ஆண்டு ஜனவரி 20க்குப் பிறகே விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளது.

சசிகலா முன்கூட்டியே விடுதலையானால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், முன்கூட்டியே விடுதலையாவதில் சசிகலா பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ‘சசிகலாவின் விடுதலை கட்சியில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,. ‘சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’என்று ஆணித்தரமாக பதில் அளித்து தெறிக்க விட்டுள்ளார்.