முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.! சுதந்திரதினத்தை முன்னிட்டு காவல் துறையில் யாருக்கெல்லாம் சிறப்பு பதக்கங்கள் தெரியுமா?

2020ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க மாண்புமிகு முதலமைச்சரின் ஆணை பிறப்பித்துள்ளார்.


பொதுமக்களின் சேவையில்தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரியபணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு2 020ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டிசிறந்தபொதுச் சேவைக்கான தமிழகமுதலமைச்சரின் காவல்பதக்கம்வ ழங்கமாண்புமிகுமுதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 

1. திரு. சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப., கூடுதல்காவல்துறை இயக்குநர், தொழில்நுட்பப் பணிகள்,சென்னை, முன்னாள்காவல்ஆணையர், மதுரைமாநகரம்.  

2. திரு.கி.சங்கர், இ.கா.ப., காவல்துறைதலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.  

3. திரு ச.சரவணன், காவல்துணை ஆணையர், சட்டம்மற்றும் ஒழுங்கு, திருநெல்வேலி மாநகரம்.  

4. மருத்துவர்(திருமதி) ச.தீபாகணிகர், இ.கா.ப., காவல்கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம்.   

5. திரு.ப்பி.ஜெகன்நாத், தலைமைகாவலர்19917, வேலைவாய்ப்பு மோசடி, மத்தியகுற்றப் பிரிவு, சென்னைபெருநகரகாவல், சென்னைமாநகரம்.  

இதேபோன்றுபுலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு2020ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகமுதலமைச்சரின் காவல்புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்களைவழங்கிட, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்: 

1. திருமதிஜி.நாகஜோதி காவல்துணைஆணையர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகரகாவல், சென்னைமாநகரம்.  

2. திரு இரா.குமரேசன், காவல்துணை கண்காணிப்பாளர், கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.  

3. திரு தி.சரவணன், காவல்உதவிஆணையர், வடக்குசரகம்(குற்றம்), சேலம் மாநகரம்.  

4. திருஎஸ்.கே.துரைபாண்டியன், காவல்துணைகண்காணிப்பாளர், காட்பாடிஉட்கோட்டம், வேலூர்மாவட்டம். 

5. திருஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், காவல்ஆய்வாளர், ஓருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவுகுற்றப் புலனாய்வுத் துறை, திருச்சி மாநகரம்.  

6. திருமதி பி.எஸ்.சித்ரா, காவல்ஆய்வாளர், மாநகரகுற்றப்பதிவேடுகள்கூடம், திருச்சி மாநகரம்.  

7. திருமதிகா. நீலாதேவி, காவல்ஆய்வாளர், மாவட்டகுற்றப்பதிவேடுகள்கூடம், சிவகங்கைமாவட்டம்.  

8. திருமதிச.பச்சையம்மாள், காவல்ஆய்வாளர், அரக்கோணம் இருப்புப்பாதை காவல்நிலையம், இருப்புப்பாதை காவல்சென்னை.  

9. திருமதி ப.உலகராணி, காவல்ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, திருநெல்வேலி.  

10. திருமதி பி.விஜயலட்சுமி, காவல்ஆய்வாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு, திருநெல்வேலி. 

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள். மேற்கண்ட விருதுகள், மாண்புமிகுமுதலமைச்சர் அவர்களால் பிறிதொருவிழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.