பால் விலைக்கு அடுத்து உயரப்போகுதாம் மின்சாரக் கட்டணம்! ஆனால், சென்னையில் மின்சார பேருந்து தொடங்கி வைக்கிறார் எடப்பாடி!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்தியாவிலே முதன்முறையாக மின்சார பேருந்துகள் சென்னையில் பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது.


சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் இயக்கும் மின்சாரப் பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நமது ஆட்களால் டீசல் பேருந்துகளையே கவனிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் சென்னையில் ஓடிய ஏசி பஸ்கள் எதையுமே கவனிக்க முடியாமல் குப்பைக்கு அனுப்பியவர்கள் நமது ஆட்கள்தான்.

மாடி பஸ், டபுள் பஸ் எல்லாமே காட்சிப் பொருளாகத்தான் இருக்கிறதே தவிர, எதுவும் மக்கள் பயன்பாட்டுக்கு உருப்படியாக இல்லை. இந்த லட்சணத்தில்தான் முதன்முதலாக மின்சார பஸ் தொடங்கி வைத்திருக்கிறார் எடப்பாடி.

பால் விலையை அடுத்து மின்சாரக் கட்டணத்தை 40% அதிகப்படுத்த இருப்பதாக ஒரு செய்தி வேகமாக பரவி வரும் வேளையில் இப்படி ஒரு பஸ் சென்னைக்குக் கிடைத்திருக்கிறது. இது நல்ல செய்தியா இல்லையா என்பதை ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் சொல்ல வேண்டும்.