பல் வலி என்று சில நாட்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தார் முதல்வர் எடப்பாடி.
அப்பலோவில் துரைமுருகனுடன் எடப்பாடி பேசிய டீலிங்! ஆட்சியை காப்பாற்ற பலே வியூகம்!
அப்போதுதான் பன்னீர்செல்வத்துக்கு எதிராக பல்வேறு காய் நகர்த்தல்கள் நடந்துமுடிந்தது. அதையடுத்து இப்போது திடீரென தொடர்ந்து இரண்டு நாட்கள் அப்பல்லோவுக்கு முதல்வர் செல்லவே, அரசியலில் பல்வேறு யூகங்கள். ஆம், முதல்வருக்கு பிளட் பிரஷர் அதிகமாகி விட்டதால், அது தொடர்பாக தொடர்ந்து இரண்டு நாட்களும் டெஸ்ட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அவருக்கு பிரஷர் அதிகம் இருப்பதை டாக்டர்கள் சுட்டிக் காட்டியபோது, ‘எல்லோரும் அவங்கவங்க பிரஷரை என் மேலதான இறக்கி வைக்கிறாங்க. எனக்கு பிரஷர் கூடாமலா இருக்கும்’ என்று கமென்ட் அடித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், பிரஷரை விளையாட்டாக எடுத்துக்கொண்டால், பிரச்னை ஏற்படும் என்று சுட்டிக் காட்டிய மருத்துவர் குழு தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சையும், யோகா போன்றவையும் சொல்லிக்கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அரசியல் ஆர்வலர்கள் முதல்வரின் அப்பல்லோ விசிட்டுக்கு வேறு காரணங்கள் கூறுகின்றனர். அதாவது தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில்தான் தங்கியிருந்தார். அடுத்து கூட இருக்கும் சட்டசபை கூட்டத்தொடர் குறித்து துரைமுருகனிடம் ஆலோசனை செய்வதற்கே எடப்பாடியார் இரண்டு நாட்களும் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இரண்டாவது நாள் விஷயம் முடிவுக்கு வந்ததால், அன்றைய தினமே துரைமுருகனும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்ததை சுட்டிக் காட்டுகிறார்கள். அப்பல்லோ என்றாலே மர்மம்தான்.