எடப்பாடி என்ற விவசாயி..? துணை ஜனாதிபதியையே ஏமாத்திட்டாரே...

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக வேட்டியில் எந்தக் கறையும் படாமல் விவசாயி வேடம் போட்டார் எடப்பாடி பழனிசாமி. விவசாயியாக மாறிய எடப்பாடியின் படம் வைரலாக்கப்பட்டது.


சமீபத்தில் சென்னைக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவை தமிழக அரசு மிகவும் சிறப்பாக கவனித்து அனுப்பியது. அதற்கு பிரதியுபகாரமாக, இவர்தான் உண்மையான விவசாயி என்று ட்வீட் போட்டிருக்கிறார் நாயுடு.

இதைவிடக் கொடுமை, அவர்களது நமது அம்மா நாளிதழில், ஸ்டாலின் விவசாயியாக வேடம் போட்டார். அதை பார்க்க சகிக்கவில்லை. நம் முதல்வர்தான் உண்மையான விவசாயியாக இருக்கிறார் என்றும் அரைப் பக்கத்துக்கு கட்டம் கட்டியிருக்கிறார்கள்.

எட்டு வழிச் சாலைக்காக நிலம் பிடுங்கப்பட்ட விவசாயிகளும், டெல்டாவில் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், தினமும் ஒரு போராட்டம் நடத்திவரும் அய்யாக்கண்ணுவிடம் இருக்கும் விவசாயிகளும் எடப்பாடியின் வேடத்தைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி விவசாயி என்றால், இவர்கள் யார் என்பதுதான் கேள்வி.