பால் விலையைக் கூட்டிட்டாரு எடப்பாடி! அடுத்து மின்சாரக் கட்டணம் ஜிவ்வாகப் போகுது!

தேர்தல் முடிந்ததுமே பால் விலையும், மின்சாரக் கட்டணமும் உயரப்போகிறது என்பதற்கான அறிகுறி தென்பட்டது.


அதேபோல் இன்று, பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனால் நுகர்வோர் விலையும் கூடுதலாகிறது.

தனியார் பால் நிறுவனங்கள் ஏற்கெனவே விலை உயர்வை அறிவித்துவிட்டன. அதனால், ஆவின் பால் நிறுவனமும் அதிகரிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற பிரைவேட் பால் நிறுவனங்கள் விலை அதிகரிப்புக்குப் பிறகு, ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு தேவை அதிகரித்தது.

அதனால், இன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பால் விலையைக் கூட்ட இருப்பதை எடப்பாடி தெரிவித்துவிட்டார். ஆவின் பால் நிறுவனத்தில் தினமும் கோடி கோடியாக கொள்ளை நடக்கிறது. யார், யாரோ ஊழல் செய்கிறார்கள்.

அந்த விஷயத்தை எல்லாம் தடுத்து நிறுத்தினால், பால் விலையை உயர்த்தவேண்டிய அவசியமே இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது குறித்து அரசு எந்த கவனமும் எடுக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல்.

அதேபோல், இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே மின் கட்டணம் குறித்தும் அறிவிப்பு வரலாம் என்று சொல்லப்படுகிறது. மக்களுக்கு அல்வா கொடுத்துட்டு, எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தினம் தினம் கிஃப்ட்டா அள்ளிட்டுப் போறாங்களே... நல்லா இருங்கப்பா...