அ.தி.மு.க.விடம் பொண்ணு கேட்கிறாங்களாமே..! பிரேமலதாவின் எம்.பி. விவகாரத்தில் எடப்பாடி

இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிகள் துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முடித்துவிட்டு தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன் ஆகியோர் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது, எம்.பி. சீட் குறித்து கூட்டணிக் கட்சிகள் குடைச்சல் கொடுப்பதற்கு புதிய விதத்தில் பதில் கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதாவது, வீட்டில் அழகான பெண் இருப்பது தெரிந்தால், பலரும் பெண் கேட்டு வருவது சகஜம்தான். பெண்ணை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் முடிவு செய்வார்கள். அதுபோல், அ.தி.மு.க.விடம் நாடாளுமன்ற மேலவை சீட் கேட்டு வருகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் கமல்ஹாசனுக்கு பதில் கொடுத்தார். அதாவது எடப்பாடிக்கு விவசாயமும் தெரியாது, அரசியலும் தெரியாது என்று கூறியிருந்தார். அதற்கு எடப்பாடி, ‘கமலுக்கு தமிழகத்தில் உள்ள துறைகள் குறித்து எதுவும் தெரியாது சினிமா துறையை மட்டும்தான் தெரியும். துறைவாரியாக தேசிய விருதுகள் பெற்று வருகிறது தமிழகம்.

கிராமத்தில் கூறும் பழமொழி ஒப்பாக கமல்ஹாசன் கூறி வருகிறார். விவசாயியாகத்தான் வருமானவரியை தற்போது வரையில் காட்டி வருகிறேன் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அதனுடைய சம்பளத்தில்தான் வருமானத்தில்தான் காட்டியுள்ளேன் அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் நான் விவசாயி’ என்று கூறியிருக்கிறார் எடப்பாடி 

நல்லாத்தான் பேச கத்துக்கிட்டார் எடப்பாடி.