தீராத பல் வலி! துடிக்கும் எடப்பாடி! வீட்டிலேயே முடங்கியதன் பின்னணி!

தீராத பல்வலி காரணமாகவே கடந்த 4 நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த திங்களன்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களை அவசரமாக தலைமைச் செயலகத்துக்கு வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த சந்திப்புக்கு பிறகு திடீரென எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மாற்றப்பட்டது. திங்கட்கிழமை முதல் தற்போது வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

பிற கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணையும் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே அவரை பார்க்க முடிந்தது. இதுதவிர அதிமுக நிர்வாகிகளை வீட்டிற்கு வரவழைத்து கட்சி நிலவரம் குறித்து விசாரித்து ஆலோசனைகளை மட்டுமே எடப்பாடி பழனிசாமி கொடுத்து வந்தார். மேலும் அவர் ரகசியமாக தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

நான்கு நாட்களாக எடப்பாடி பழனிசாமியின் சந்திப்புகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் பட்டுள்ளார் என்ன காரணம் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல் வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அதனால் தான் அவர் தலைமைச் செயலகம் வரவில்லை என்று அரசு தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

தாங்க முடியாத பல் வலி காரணமாக வீட்டிலேயே முதலமைச்சர் ஓய்வெடுத்து வருவதாகவும் மருத்துவர்கள் வீட்டிலேயே வந்த அவருக்கு சிகிச்சை கொடுத்து சொல்வதாகவும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியிலான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பல்வலி என்று கூறி அரசு பணிகளை தவிர்ப்பதாக பேசப்படுகிறது