கோவை துயரத்துக்கு ஆறுதல் சொல்லப் போகிறார் எடப்பாடி பழனிசாமி!

கோவை மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிர் இழ்ந்தவர்கள் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.


வீடு இடிந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற் மேட்டுப்பாளையம் _ உதகை சாலையில் ஏராளமான நபர்கள் ஒன்றுசேர்ந்து மறியல் செய்து வருகிறார்கள். அவர்கள் மரணத்துக்குக் காரணம் ஒரு தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் என்று சொல்லப்படுகிறது. 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பல்கலை கழகம் சார்பில் நடைபெற இருந்த தேர்வுகளும் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏரிகள், குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினர்.

மேலும் காற்றதழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், இனியும் மேற்கொள்ள வேடிண்ய பணிகள் குறித்து முதல்வர் அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை இந்த ஆலோசனை கூட்டத்தில் வழங்கியதாக தெரிகிறது.

 அணை நீர்வரத்தினை கண்காணித்தல், கரையோர மக்களுக்கான முன்னெச்சரிக்கை போன்றவை, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்தல், மழை காரணமாக அத்தியவாசிய பொருட்கள் கிடைப்பதில் பொதுமக்கள் சிரமம் ஏற்படுவதை தடுத்தல்,

மழையால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தடுக்கும் பொருட்டு நடமாடு மருத்து முகாம் நடத்துதல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் என மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்த நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், தேசிய பேரிடர் மீட்புபடை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடவும் முதல்வர் இந்த கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

நாளை கோவைக்குச் செல்லும் முதல்வர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல இருக்கிறார்.