ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மோடியின் கனவுத் திட்டம். ஏனென்றால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், நாடெங்கும் ஒரே கட்சியாக வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் என்பது பா.ஜ.க. கருத்து.
டெல்லியில் விரட்டப்பட்ட சிவி சண்முகம்! காரணம் இந்த பாஜக தலைவர் தான்?
அதனாலே, கடந்த ஆட்சிக் காலத்தில் சிந்தனையில் இருந்த திட்டத்தை இந்த ஆண்டு செயலுக்குக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார். அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு 40க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால், 19 பேர் மட்டுமே கலந்துகொண்ட அனைத்துக்கட்சிக் கூட்டம் நேற்று பிரதமர் முன்பு நடந்தது.
அந்தக் கூட்டத்தை காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்திருந்த நிலையில், அ.தி.மு.க.வின் சார்பில் அமைச்சர் அனுப்பிவைக்கப்பட்ட சி.வி.சண்முகம் திருப்பியனுப்பப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. முதல்வர் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சையிலும், துணை முதல்வர் கோவை இயற்கை சிகிச்சை மையத்திலும் இருந்ததால், சண்முகத்தை அனுப்ப முடிவு செய்தார்கள்.
ஆனால், இது குறித்து டெல்லிக்கு எந்தத் தகவலும் சொல்லாமல் சண்முகத்தை அனுப்பிவிட்டார்கள். பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்துக்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் கலந்துகொள்ள முடியாதா என்று பியூஸ் கோயல் டென்ஷன் ஆகியிருக்கிறார். தகவலை அமித்ஷாவிடம் எடுத்துச்சொல்ல, அவரும் கோபாகி இருக்கிறார்.
அதனாலே, சண்முகம் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இந்தத் தகவல் சொல்லப்பட்டதும் சண்முகம் சாமியாடி விட்டாராம். இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் என்னை அனுப்பி அசிங்கப்படுத்திவிட்டார்கள் என்று கொந்தளித்திருக்கிறார்.
வேறு ஒருவர் வரலாமா என்றுகூட கேட்காமல் அனுப்புவது எத்தனை மடத்தனம் என்று தலைமைச் செயலக அதிகாரிகளையும் வறுத்தெடுத்தாராம். இவருக்குப் பயந்துதானோ என்னவோ, அப்பல்லோ மருத்துவமனைக்குள் நுழைந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.