நான்கு அமைச்சர்களிடம் எடப்பாடி தேர்தல் விசாரணை! விரைவில் பதவிக்கு ஆப்பு!

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் அத்தனை அமைச்சர்களையும் களத்தில் இறக்கிவிட்டார் எட்டப்பாடி பழனிசாமி.


மணியான இரண்டு அமைச்சர்கள் மட்டும்தான் எடப்பாடி உத்தரவுக்கு அப்படியே கீழ்பணிந்து பணியாற்றி உள்ளனர். கொங்கு மற்றும் வன்னிய அமைச்சர்களின் பணி பரவாயில்லை ரகம். அதனால் கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால், தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்கள் யாரும் ஒழுங்காக பணியாற்றவில்லை என்பதுடன் தேர்தல் செலவுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தையும் அமுக்கிக்கொண்டதாக நிர்வாகிகள் குற்றம் சொல்லியிருக்கிறார்கள்.

இதில் ஆதாரபூர்வமாக புகார் சொல்லப்பட்ட நான்கு அமைச்சர்களிடம் மட்டும் இன்று எடப்பாடி விசாரணை நடத்தினார். ஆனால், அவர்கள் நால்வருமே, ‘எங்களை வேண்டுமென்றே கேவலப்படுத்துகிறீர்கள்… இது சரியல்ல. இரவும் பகலும் உழைத்து எங்கள் கைக்காசை செலவழித்திருக்கிறோம்” என்று டென்ஷன் காட்டிவிட்டார்களாம்.

இவர்களிடம் இப்படி பேசினால் சரிப்படாது ஜெயலலிதா பாணியில் கேட்டால்தான் சரியான பதில் கிடைக்கும் என்று மணி அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு, தேர்தல் முடிவு வரட்டும் என்று சொல்லி அமைதி படுத்தியிருக்கிறார் முதல்வர்.

ஆக, தேர்தல் முடிவுக்குப் பிறகு நான்கு அமைச்சர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது.