ஈபிஎஸ் மீது மேலிடம் அப்செட்! ஓபிஎஸ் மீண்டும் முதல்வர்? ஆனந்தத்தில் ஆதரவாளர்கள்!

தனி ஒரு மனிதராக எடப்பாடி இந்தத் தேர்தலை எதிர்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பன்னீர் ஒரு பக்கம் சுற்றிக்கொண்டு இருந்தார் என்றாலும், அதிகமாக அலைந்தது எடப்பாடி பழனிசாமிதான். ஆனால், ஜெயித்தது பன்னீர்தான், அதனால எடப்பாடியைவிட பன்னீர்தான் தேர்தல் கிங் என்று அவரது வட்டாரம் காலரை தூக்கிவிடுகிறார்கள்.


பன்னீர்செல்வம் ஊர் ஊராகப் போய் பிரசாரம் மேற்கொண்டாலும், அவருக்கு அரசு மூலம் போதிய ஆதரவு கொடுக்கப்படவில்லையாம். எடப்பாடி செல்லும் இடம் முழுவதும் ஏராளமான ஆட்களை காசு கொடுத்து இழுத்துவந்திருக்கிறார்கள். ஆனால், பன்னீருக்கு எல்லாமே தானா சேர்ந்த கூட்டம்.

அதேபோன்று இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்த 5 தொகுதிகளும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தது. இங்கேயும் பன்னீர் வியூகம்தான் எடுபட்டது. ஒரே ஒரு நாடாளுமன்றத் தேர்தலைக்கூட எடப்பாடியால் வெல்ல முடியவில்லை. ஆனால், பன்னீர் கடுமையான போட்டிக்கு இடையில் தன்னுடைய மகனை முதன்முறை நிறுத்தி ஜெயிக்க வைத்துவிட்டார்.

ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி போய்விடக்கூடாது என்று எடப்பாடி என்னவெல்லாம் செய்தார் என்பதை பா.ஜ.க. மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. நேரம் கிடைக்கும்போது, எடப்பாடிக்கு பாடம் புகட்டவும், பன்னீரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர வைக்கவும் பா.ஜ.க. தயாராக இருக்கிறது என்கிறார்கள்.

ஆக, அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் அதிகமாகிக்கொண்டே போவதால், எந்த நேரமும் முட்டல் மோதல் ஏற்படலாம் என்பதுதான் நிலைமை.