அப்பல்லோ மருத்துவமனையில் ராமதாஸை சமாதானப்படுத்தினாரா எடப்பாடி பழனிசாமி?

உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, சேலம் மாநகராட்சியை கைப்பற்றியே தீருவோம் என்று எடப்பாடிக்கு கடும் நெருக்கடி கொடுத்துவந்தது பா.ம.க. டீம். இந்த விவகாரத்தை புத்திசாலித்தனமாக கையாள்வதாக நினைத்து, உள்ளாட்சி முக்கியப் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலை அறிவித்துவிட்டார்.


இதுகுறித்து வேறு எந்தக் கட்சிக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் எடப்பாடியாரின் விருப்பம். ஆனால், இந்த விவகாரத்தினால் பா.ம.க. கோபித்துக்கொண்டு அணி மாறும் என்று சொல்லப்பட்டது. அதனால், ராமதாஸை நேரில் சமாதானப்படுத்த நினைத்தார் எடப்பாடி.

நேரடியாக தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று சந்தித்தால் சரியாக இருக்காது, அதேநேரம் ராமதாஸையும் கோட்டைக்கு அல்லது வீட்டிற்கு வரவழைக்க முடியாது. அதனால்தான் அப்பல்லோவில் வைத்து ராமதாஸை சந்தித்து விளக்கம் கொடுத்தாராம்.

உள்ளாட்சி நடக்கிறதோ இல்லையோ, தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்து நிறுத்த வேண்டும், அதற்குத்தான் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார் எடப்பாடி. ராமதாஸ்க்கு இந்த திடீர் முடிவு அதிர்ச்சியாக இருந்தாலும், பெரிதாக ஆர்வம் காட்டவில்லையாம். அதுசரி, ராமதாஸ்க்கு உடல்நிலை எப்படி இருந்தது என்று கேட்கிறீர்களா..? அதுதான் படத்தில் பார்க்கும்போதே தெரிகிறதே. முகத்தில் மாஸ்க் எல்லாம் போட்டு காட்டுகிறார்களாம்.

அட, போங்கப்பா.