கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு முதல் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து..!

மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் திரு. எடப்பாடிமு. பழனிசாமிஅவர்கள் இன்று (14.8.2020) தலைமைச் செயலகத்தில், பெருநகரசென்னைமாநகராட்சியின் சார்பில் கொரோனாவைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையேவிழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் 30 சிறிய அதிநவீன எல்.இ.டி.வீடியோ வாகனங்களின் சேவைகளை கொடியசைத்துதுவக்கி வைத்தார்கள்.மேலும், சென்னைபெருநகரில்


10லட்சம் இல்லங்களுக்கு மூன்று கட்டங்களாக 30 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்குமற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் பணி, கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய 1 லட்சம்நபர்களுக்கு கைப்பேசி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்துதெரிவித்தல், நேப்பியர் பாலம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைமேம்பாலம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளமாறும் வண்ணவிளக்குகள் ஆகியவற்றை துவக்கி வைத்தார்கள். 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனாவைரஸ் தொற்றுதடுப்புமற்றும் பாதுகாப்பு பணிகளில் 38,198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனாவைரஸ் தொற்றுபரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரிசேகரிக்கும் மையங்கள், 10 நடமாடும் மையங்கள்,எனமொத்தம் 54 மையங்கள்உள்ளன.

இதுமட்டுமின்றி, வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள்உள்ளிட்டநபர்களின் இல்லங்களுக்கே சென்று கொரோனா தொற்று பரிசோதனைகள்செய்யஏதுவாக 50 ஆட்டோக்கள் மூலமாகவும் மாதிரிகள்சேகரிக்கப்பட்டுவருகின்றன. இதுவரை 8,21,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன.

நாட்டிலேயேஅதிகபரிசோதனைகள் மேற்கோண்ட பெருநகரங்களில், பெருநகரசென்னை மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது. சென்னையில் மட்டும் நாள்தோறும் 12,000 முதல் 14,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 51 கோவிட் பாதுகாப்புமையங்களில் 18,614 படுக்கைவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்ல 289 வாகனங்கள்உள்ளன. சென்னைமாநகரகுடிசைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களோடு தொடர்பில்உள்ள தொற்றால் பாதிக்கப்படாதவர்களை தனிமைப்படுத்த ஏதுவாக30,000 நபர்கள் தங்கக்கூடிய வகையில் மையங்கள் அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளன.

தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 500 முதல் 550 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் வைரஸ் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 31,702 சிறப்புகாய்ச்சல் மருத்துவமுகாம்கள்நடத்தப்பட்டு, 17,86,970 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளை கைப்பேசியின் மூலமாக கண்காணிக்கும் திட்டம் மாநகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. சென்னை சமூக களப்பணித் திட்டம் என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள்போன்றநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

பெருநகர சென்னைமாநகராட்சி பகுதியில் கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய 1 லட்சம் நபர்களுக்கு மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள்வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் கைப்பேசி எண்கள் மூலமாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.