இந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அரசு என்ன முடிவு செய்யப்போகிறதோ..?

தமிழகத்தில் தொற்றின் காரணமாக மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்வது கடினமாக உள்ள நிலையில் மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதும், தேர்வு மையம் வந்து தேர்வு எழுதுவது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும்.


ஆனால், நீட் தேர்வை எப்படியும் நடத்தியே தீர்வது என்பதில் மத்திய அரசு உறுதியாகவே இருக்கிறது. தேர்வை நடத்தியே தீரவேண்டும் என்று தள்ளிப்போட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஒருபுறம் தொற்றின் தாக்கமும், மறுபுறம் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற நிச்சயமற்ற நிலையும், மாணவர்களின் இறுக்கத்தை அதிகப்படுத்தி வருகின்றன. போக்குவரத்து சாதனங்களும் குறைந்துவிட்ட இந்த சூழ்நிலையில், மாணவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். 

மேலும் இதன் மூலம் அவர்களுக்கு தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகளும் ஏற்படலாம். இந்த இக்கட்டான சூழ்நிலையை தவிர்ப்பதற்கு, மருத்துவ சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை பரிசீலிக்கலாம் என்ற கருத்தை தமிழக அரசு முன்வைத்துள்ளது.

பழனிசாமி. மத்திய அரசு என்ன முடிவு செய்யப்போகிறதோ..?