வரப்போகுது 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு..! திகிலில் இருப்பது பன்னீரா எடப்பாடியா?

நீதித்துறையில் ஒருசில வழக்குகள் உடனடியாக வந்துவிடும், ஒருசில வழக்குகள் ஏன் காலதாமதம் ஆகிறது என்று தெரியாமலே தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். அப்படியொரு ரகசியம்தான் 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு.


நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு தொடங்கப்பட்டது. இந்த வழக்கில் கொறடா உத்தரவை மீறியதால், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஏனென்றால், இதே விஷயத்தில்தான் தினகரன் எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் பதவியும் காணாமல் போனது. எனவே, இந்த விவகாரத்தில் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையில், பிப்.4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்று தகவல் வந்துள்ளது. விசாரணை முடிவுக்கு வந்தால் எப்படியும் இம்மாதமே தீர்ப்பும் வரவேண்டும். tஅப்படியெல்லாம் நடந்தால் என்னாகும் என்ற கவலை பன்னீருக்கா அல்லது எடப்பாடிக்கா என்று கேட்டால், யாருக்கும் இல்லை என்கிறார்கள்.

எல்லாம் அவர்கள் இருக்கும் இடம் அப்படி!