எடப்பாடியின் காலை வாரும் பன்னீர்! மகனின் தேனிக்காக, பெரியகுளம் ஆண்டிப்பட்டி பலிகடா!

இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளை கண்டு கொள்ளாமல் தனது மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் மட்டுமே ஓபிஎஸ் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.


தன்னுடைய மகன் ரவீந்தரநாத் மட்டும் வெற்றி அடைந்தால் போதும் என்பது மட்டும்தான் இப்போது ஓ.பி.எஸ். மனதில் இருக்கும் ஒரே எண்ணம். அதற்காக சொந்தக் கட்சியை இடைத்தேர்தலில் காவு குடுக்கத் தயாராகிவிட்டார் பன்னீர்.

பெரியகுளம், ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் கவனம் செலுத்துங்கள் என்று பன்னீருக்கு எடப்பாடி நோட் போட்டு அனுப்பினாராம். ஆனால், இதுவரை அந்த இரண்டு தொகுதிகள் பற்றி கண்டுகொள்ளும் நிலையில் பன்னீர் இல்லை. அந்த இரண்டு தொகுதிகளிலும் தினகரனின் அ.ம.மு.க. ஜெயித்தால் ஜெயிக்கட்டும் என்ற மனநிலையில் இருக்கிறாராம் பன்னீர்.

தேனி தொகுதியில் தன் மகன் ஜெயிக்க வேண்டும், மற்ற இரண்டு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் தினகரன் ஜெயித்துக்கொள்ளலாம் என்பதுதான் எழுதப்படாத அக்ரிமென்ட் என்று அ.தி.மு.க.வினரே தெரிவிக்கிறார்கள்.

அதனால்தான் இரண்டு இடைத்தேர்தல் தொகுதியிலும் எந்த கவனிப்பும் இதுவரை இல்லையாம். தகவல் தெரிந்தாலும் எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவிக்கிறார். அவரவர் கவலை அவரவர்க்குத்தான்.