நாங்கள் மோடிக்கு அடிமையா? பொதுக்குழுவில் எடப்பாடியார் வைத்த ட்விஸ்ட்!

இன்று சென்னையில் நடைபெற்ற அ.தி.முக. பொதுகுழு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏகப்பட்ட பாராட்டுகளை அள்ளிக்கொடுத்தது அ.தி.மு.க. குறிப்பாக 6 மருத்துவக் கல்லூரி வழங்கியதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


அதேபோன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதற்கும் பாராட்டு வழங்கப்பட்டது. 

அதேநேரத்தில், அ.தி.மு.க.வை அடிமைக்கட்சி என்று தொடர்ந்து தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது. நாங்கள் நலத்திட்டங்கள் பெறுவதற்காக மட்டுமே பா.ஜக.வுடன் இணைந்து செயல்படுகிறோமே தவிர, தமிழகத்தில் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று வீராவேசமாகப் பேசி இருக்கிறார்.

இப்படி பேசுவதற்கு மேலிடத்தில் அனுமதி வாங்கிவிட்டாரோ..