கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதல் அமைச்சர், வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் யாருக்கு பொறுப்பை கொடுத்துவிட்டுப் போவார் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
வெளிநாட்டுப் பயணத்துக்கு எடப்பாடியார் ரெடி! பொறுப்பு யாருக்குத் தெரியுமா? மருத்துவ சிகிச்சையும் இருக்கிறதாம்!

ஆனால், அப்படி யாருக்கும் முதல்வர் பொறுப்பை பகிர்ந்து கொடுக்க மாட்டார் என்றுதான் தெரியவந்துள்ளது. அந்த அளவுக்கு முக்கியமான விவகாரம் எதுவும் இல்லை என்பதால், சாதாரணமாக வெளிநாடு போகிறார். அவசர முடிவுகள் எதுவாக இருந்தாலும் செல்போன் மூலம் பேசிக்கொள்ள முடியும், இணையம் மூலம் தகவல் பரிமாறிக்கொள்ளலாம் என்று அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து இருக்கிறார்.
இதனால் தங்கமணி, வேலுமணி இருவரும்தான் செம அப்செட். உண்மையில் டென்ஷன் ஆகவேண்டிய ஓ.பன்னீர்செல்வம், இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லையாம். என் மகனுக்கு மந்திரி பதவி கிடைப்பது மட்டும்தான் என்னுடைய ஒரே ஆசை என்று அதில்தான் குறியாக இருக்கிறார்.
வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, சில நாட்கள் மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்வார் என்று தெரியவந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிசாமிக்கு ரத்த அழுத்தக் குறைபாடு, தொண்டைப்புண் ஆகியவை நீண்ட நாட்களாக இருக்கிறது. இவற்றுக்கு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நல்லபடியாக முதல்வர் சென்று வரட்டும், நிறைய முதலீடுகளை அள்ளி வரட்டும்!