தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று சுட்டது யார்? எடப்பாடி சொன்ன விளக்கம்! அதிர்ந்த சட்டப்பேரவை!

துப்பாக்கிச்சூடு நடந்துச்சா? இல்லையா? பாவம் காங்கிரசே கன்ப்யூஸ் ஆயிடுச்சு


“துப்பாக்கிச்சூடு என்று எதுவுமே நடைபெறவில்லை. அது ஒரு கற்பனைக் கதை” என முதல்வர் பேரவையில் பேசியது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மனதில் வைத்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி, “வேன் மீது நின்று துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்?” என மறைமுகமாக வினவியதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “துப்பாக்கிச்சூடு என்று எதுவுமே நடைபெறவில்லை. அது ஒரு கற்பனைக் கதை” என தெரிவித்தார்..

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி மெரினாவில் பொதுமக்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்பதை நன்கு அறிந்த ராமசாமி, துப்பாக்கிச்சூடு நடத்த பல நடைமுறைகள் உள்ளபோது வேன் மீது நின்று துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன் எனவும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுவது ஒரு கற்பனைக் கதை என்றும் இதுகுறித்து ஆணையம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராமசாமி காவல்துறையின் விதிமீறலை முதலமைச்சர் ஏற்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.