எடப்பாடி வெளிநாடு விசிட்! ஆக்டிங் சி.எம். பன்னீர் அதிரடியில் இறங்குவாரா?

எடப்பாடியின் எச்சரிக்கை வியூகம்,உடைப்பாரா பன்னீர்?


எடப்பாடி முதல்வராக வெளிநாடு போவது இதுதான் முதல்த் தடவை.ஆனால் அதை மனதார அனுபவிக்க முடியாத சூழலில் தவித்துக்கொண்டு இருக்கிறார்,பாவம்! மாநில முதல்வர் வெளிநாடு போகும் போது ஒர் ஆக்டிங் சி.எம்மை நியமித்துவிட்டுதான் போக வேண்டும்.எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா போன சமயம் அந்த பதவியை நெடுஞ்செழியனிடம் கொடுத்து விட்டுப் போனதும்,

அந்த சமயத்தில் பா.ம.க நடத்திய கடுமையான போராட்டங்களை எப்படிக்  கட்டுப்படுத்துவது என்று முடிவெடுக்க முடியாமல் அவர் திகைத்து நின்றதும் தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத பக்கங்கள். அது போன்ற சூழல் மாநிலத்தில் இல்லாவிட்டாலும் கட்சிக்குள் நடக்கும் கபட நாடகங்கள் அவரை கலவரப் படுத்திக் கொண்டு இருக்கின்றன.

தனக்கு பதிலாக தன் உள்ளம் கவர்ந்த மணிகளில் ஒருவரைத்தான் அந்த பதவியில் உட்கார வைக்க அவருக்கு விருப்பம்.ஆனால் , அமித் ஷா ஒபிஎஸ் பக்கம் கையைக் காட்டியதும் எதிர்த்து பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அதனால், அவர் வகுத்திருக்கும் புதிய வியூகத்தில் அரசியல் சாதிகளை , அமைச்சர்களை முன்னிருத்தாமல் அதிகாரிகளை முன்னிருத்தி இருக்கிறாராம்.

அதிகாரிகளுக்கு அவர் தந்த இன்ஸ்ட்ரக்‌ஷன் இதுதான்.எல்லாம் நல்லா போய்கிட்டே இருக்கு அப்படியே போகட்டும்.இங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு தினமும் ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். ஆக்டிங் சி.எம்மோ  , வேறு அமைச்சர்கள் யாருமோ புதிதாக எதையாவது செய்ய நினைத்தால் அதை முட்டுக்கட்டை போட்டு தடுக்க வேண்டியது உங்கள் வேலை.

பயணத்திட்டத்தை பாதியில் கைவிட்டு நான் நாடு திரும்பினால் என் மீது இருக்கும் அச்சம் போய்விடும்.ஆகவே,எல்லா அமைச்சர்களையும் கண்கொத்திப் பாம்பாக கண்காணியுங்கள்,வழக்கமான காரியங்கள் நடக்கட்டும்.ஆனால்,ஒரு புதிய ஃபைலோ,புதிய திட்டமோ நடந்தால் தடுக்க வேண்டும்.

குறிப்பாக காவல் துறை அமைச்சர்களின் அண்டர் கிரவுண்ட் ஆக்டிவிட்டிகளை அவ்வப்போது எனக்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாகச் சொல்லி இருக்கிறாராம்.பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து விட்டு டெல்லி திரும்பியபோது அவரது ஜனதா கட்சியே கானாமல் போன கதை நடக்காமலிருந்தால் சரி!.