பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி தேர்தல் செக்! எடப்பாடிக்கு பன்னீர் ஊழல் செக்!

வாரணாசிக்குப் போன பன்னீர்செல்வம் நேரடியாக பா.ஜ.க.வுக்குப் போவதாக செய்தி பரப்பியது எடப்பாடி பழனிசாமிதான் என்ற சந்தேகத்தில் இருக்கிறார் ஓ.பி.எஸ். அதனால் ஏற்கெனவே இருவருக்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.


இந்த நிலையில் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சியில் பன்னீர்செல்வத்தின் தலையீட்டை முற்றிலும் ஒழித்துக்கட்டும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக செய்திகள் கசிகின்றன. அந்த வகையில் தேர்தல் பணி செய்வதில் சுணக்கம் காட்டினார்கள், பணத்தை சுருட்டினார்கள் என்று பன்னீருக்கு ஆதரவாக இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நகரச் செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு, முழுக்க முழுக்க எடப்பாடியின் ஆட்களை நியமனம் செய்ய இருக்கிறாராம்.

அதே போன்று பன்னீர் ஆட்கள் வசம் கொடுக்கப்பட்ட பணம் திருப்பி வாங்கப்படவும் நடவடிக்கை இருக்குமாம். பணம் திரும்பிக்கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு ஆதரவாக பன்னிர் நிற்க முடியாது என்று எடப்பாடி கருதுகிறார். இந்த பட்டியல் இப்போது சீரியஸாக எடுக்கப்பட்டு வருகிறதாம்.

எடப்பாடியின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க நினைக்கும் பன்னீர், எடப்பாடி மற்றும் அவரது ஆதரவு கொங்கு அமைச்சர்களின் ஊழல்களை ஆதாரபூர்வமாக தோண்டி எடுக்கிறாராம். ஆஹா, ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டே மாட்டிக்குவாங்க போலிருக்கே...